131. அருள்மிகு அமிர்தகலசநாதர் கோயில்
இறைவன் அமிர்தகலசநாதர்
இறைவி அமிர்தவல்லி
தீர்த்தம் நால்வேத தீர்த்தம்
தல விருட்சம் வன்னி மரம்
பதிகம் சுந்தரர்
தல இருப்பிடம் திருக்கலயநல்லூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'சாக்கோட்டை' என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - வலங்கைமான் சாலையில் சுமார் 4.5 கி.மீ. தொலைவு சென்று சாக்கோட்டை அடைந்து வலதுபுறம் உள்ள தெருவில் சென்றால் கோயிலை அடையலாம். இங்கிருந்து மருதாநல்லூர் சிவன் கோயில் 2 கி.மீ. தொலைவு.
தலச்சிறப்பு

Kalayanallur Gopuramபிரளய காலத்தில் அமிர்தம் இருந்த கலசம் வந்து தங்கியதால் இப்பகுதி 'கலயநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. சாக்கியர்கள் வாழ்ந்த பகுதியாதலால் பிற்காலத்தில் இப்பகுதி 'சாக்கோட்டை' என்று அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.

மூலவர் 'அமிர்தகலசநாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'அமிர்தவல்லி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

Kalayanallur Guruகோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

இத்தலத்தில் தபஸ் அம்மன் திருவுருவம் உள்ளது. இந்த அம்மனுக்கு பௌர்ணமி அன்று 48 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி திருவுருவம் சிறப்பாக உள்ளது. கும்பகோணத்தில் மகாமகத்தன்று நடைபெறும் தீர்த்தவாரிக்கு இத்தலத்திலிருந்தும் உற்சவமூர்த்தி மகாமக குளத்திற்கு எழுந்தருளுவார்.

சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 10 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். கோயில் தொடர்புக்கு: ஆனந்த் குருக்கள் - 97882 02923

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com